Wednesday, February 23, 2011

கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !


காலுக்கு செருப்பும் மில்லை
கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா !

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
வீடு முச்சூடும் அழும்.

ஒன்றுபட்டு போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே
இம்சை முறைகளெல்லாம்

கடவுளில்லை கடவுளில்லை
கடவுள் என்பதில்லையே !
உடலைக் கண்டதுண்டமாக்கி
ஊறு செய்த போதிலூம்
கடவுளில்லை கடவுளில்லை !

பச்சைக் குழ்ந்தைக்கு பாலுமிலை - அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே
கல்லில் இட்டு வணங்குகின்றார்,
முக்திக்கென்றே !

கவி - ஜீவானந்தம்

4 comments:

  1. ஃஃஃஃஃகடவுளில்லை கடவுளில்லை
    கடவுள் என்பதில்லையே !
    உடலைக் கண்டதுண்டமாக்கி
    ஊறு செய்த போதிலூம்
    கடவுளில்லை கடவுளில்லை !ஃஃஃஃஃ

    பாரதி படிச்ச மாதிரியே இருக்குதே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  2. word verification எடுத்து விடுங்க கருத்திட இலகுவாய் இருக்கும்...

    ReplyDelete
  3. ரோஜா அழகு என்பது ஒரு ஒப்பீடுதான்.
    ஒப்பீடு தான் எது அழகானது என்பதையும்,அழகானதல்ல என்பதையும் எடுத்துக்காட்டும்.

    ReplyDelete
  4. பட்ஜெட் வாசிக்கும் வாசிகளுக்கு புரியுமா?
    நமது ஆதங்கம்.

    ReplyDelete

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...