Monday, May 31, 2010

காதலித்து பார்...

காதலித்து பார்...
கண்கள் குருடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்

காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்

காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்

காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்

காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு

காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......



http://www.kavinila.com/

காதலித்துப் பார்


 கவி -- வைரமுத்து
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….
உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !
***
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்…
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
***
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்…
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!
***
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!
***

Saturday, May 29, 2010

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்..............


வரிகள்:- வாலி 
திரை படம் :- நான் கடவுள் 

 


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே



அம்மையும் அப்பனும் தந்ததா...
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா...
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நான் அறியாததால்...
இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே.....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே.....


அத்தனை செல்வமும் உன்னிடத்தில்...
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்...
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா... இருமுறையா...
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா.. பழவினையா...
கனம் கனம் தினம் எனைக் குடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...
அருள் விழியால் நோக்குவாய்...
மலர் பதத்தால் தாங்குவாய்...
உன் திருக்கரம் எனை அரவனைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே,,,,,

2010 உலகக் கிண்ணம் காற்பந்து இறுதி பிரிவுகள்






பிரிவு A
பிரிவு B
பிரிவு C
பிரிவு D
தென் ஆபிரிக்கா
ஆர்ஜென்டினா 
இங்கிலாந்து
  ஜெர்மனி






 மெக்சிக்கோ

நைஜீரியா




அமெரிக்கா

ஆஸ்திரேலியா 
உருகுவே 
 தென் கொரியா 
 அல்ஜீரியா 
சேர்பியா
பிரான்ஸ் 
 கிரீஸ்
 ஸ்லோவேனியா  
 
 கானா



பிரிவு E
பிரிவு F
பிரிவு G
பிரிவு H
நெதர்லாண்ட்ஸ் 
இத்தாலி 
 பிரேசில் 
 ஸ்பெயின் 
 டென்மார்க்  
பரகுவே 
தென் கொரியா  
சுவிட்சர்லாந்து
ஜப்பான்
நியூ  சிலாந்து 
ஐவரி கோஸ்ட்
ஹோண்டுராஸ் 
கமேரூன் 
ஸ்லோவாகியா 
போர்த்துகல்

சிலி 

Friday, May 28, 2010

2010 உலகக் கிண்ணம் காற்பந்து

19வது ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.  வது ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி விட்டது.

ஒன்பது நகரங்களில் பத்து  மைதானங்களில் நடைபெற உள்ளன  2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடின.  32 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உதைப்பந்தாட்டத்தின் பலம் வாய்ந்த நாடுகள் முட்டி மோதி தமது திறமையை வெளிப்படுத்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
  1. தென் ஆபிரிக்கா
  2. இங்கிலாந்து
  3. நெதர்லாண்ட்ஸ் 
  4. நைஜீரியா
  5. ஸ்லோவேனியா
  6. கானா
  7. சேர்பியா
  8. பிரான்ஸ் 
  9. ஆர்ஜென்டினா
  10. கிரீஸ்
  11. ஜெர்மனி
  12.  உருகுவே 
  13. ஆஸ்திரேலியா 
  14. வட கொரியா   
  15. தென் கொரியா  
  16. அமெரிக்கா
  17. அல்ஜீரியா 
  18. மெக்சிக்கோ
  19. ஜப்பான்
  20.  டென்மார்க்  
  21. கமேரூன் 
  22. நியூ  சிலாந்து 
  23. ஸ்லோவாகியா 
  24. பரகுவே 
  25. இத்தாலி 
  26. பிரேசில் 
  27. ஐவரி கோஸ்ட்
  28. போர்த்துகல்  
  29.  சிலி 
  30. ஹோண்டுராஸ் 
  31. சுவிட்சர்லாந்து
  32. ஸ்பெயின் 




என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...