Thursday, April 29, 2010

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி........




வரிகள்:- ந.முத்துக்குமார் 
திரை படம் :- 7G ரெயின்போ காலனி










நினைத்து நினைத்து பார்த்தேன் 
நெருங்கி விலகி நடந்தேன்
 உன்னால்தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே 
உன்னால் தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....

Wednesday, April 21, 2010

விவேகானந்தரின் பொன்மொழிகள்

ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

துளி துளி துளி மழையாய் வந்தாளே...


வரிகள்:- ந.முத்துக்குமார் 
திரை படம் :- பையா

















துளி துளி துளி மழையாய் வந்தாளே...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில்
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

பூங்காற்றே பூங்காற்றே


வரிகள்:- ந.முத்துக்குமார் 
திரை படம் :- பையா












பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
(பூங்காற்றே..)

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
(பூங்காற்றே..)

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் மலையன் ஒரு பக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்றூ புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே
(என் நெஞ்சோடு..)
(பூங்காற்றே..)

Thursday, April 15, 2010

வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- பையா
 







 

சுத்துதே சுத்துதே பூமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
(சுத்துதே..)

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
(சுத்துதே..)

இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
உன்னை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி எனும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
(சுத்துதே..)

அடடா மழைடா அட மழைடா

வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- பையா
 அடடா மழைடா அட மழைடா

தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைச்சான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...