Thursday, July 15, 2010

ஆருயிரே ஆருயிரே அன்பே....















திரை படம் :- மதராசபட்டினம்  
வரிகள்:- ந.முத்துக்குமார்  
இசை  :- G. V. பிரகாஷ்  
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என (ஆருயிரே )

விழிதாண்டி போனாலும் 
வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாறனோ 
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பெனே

உயிரே என் உயிரே
உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன் (ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே ..

மதராசபட்டினம் பாடல் வரிகள்









திரை படம் :- மதராசபட்டினம்  
வரிகள்:- ந.முத்துக்குமார் 
இசை  :- G. V. பிரகாஷ் 


பூக்கள்  பூக்கும்   தருணம்  ஆருயிரே
பார்த்ததாரும்  இல்லை 
உலரும்  காலை  பொழுதை
முழு  மதியும்  பிரிந்துப்போவதில்லை 
நேற்றுவரை  நேரம்  போகவில்லை
உனதருகே  நேரம்  போதவில்லையே …
எதுவும்  பேசவில்லையே  இன்று  ஏனோ
எதுவும்  தோன்றவில்லையே  இது   என்னவோ ..
இரவும்  விடியவில்லையே , அது  முடிந்தால்
பகலும்   முடியவில்லையே  பூந்தளிரே …
O… O… O…
O… O… O…
வார்த்தை  தேவையில்லை  வாழும்  காலம்வரை
பாவை  வாழ்வின்  ஒளிப்பெசுமே 
நேற்று  தேவையில்லை  நாளை  தேவையில்லை
இன்று  இந்த  நொடி   போதுமே 
வேர்  இன்றி  விதியின்றி  வின்  தூவும்  மழியின்றி
இது  என்ன  இவன்  தோட்டம்  பூப்பூக்குதே 
வாழ்  இன்றி  மான்  இன்றி
வருகின்ற  யூத்தம்  இன்றி
இது  என்ன  இவனுக்குள்  ஏதேதோ  மின்னுதே 
இதயம்  முழுதும்  இருக்கும்  இந்த  தயக்கம்
நெஞ்சிக்குள்ளும்  இருக்கும் 
இதையறிய  எங்கு  கிடைக்கும்  விளக்கம்
அது  கிடைத்தால்  சொல்லவேண்டும்  எனக்கும் 
பூந்தளிரே …
எந்த  மேகமிது  எந்தன்  வாசல்   வந்து
எங்கும்  ஈர  மழைத்தூவுதே 
என்ன   உறவு  இது  எதுவும்  புரியவில்லை
என்றபோதும்  இது  நீ  என்பேன் 
யார்  என்று  அறிய ஆமல்
பெறக்கூட  தெரியாமல்  இவனோடு  ஒரு  சொந்தம்  உருவானதென் 
ஏனென்று  கேட்காமல்  வருங்காலம்  நிற்காமல்
இவன்  போகும்  வழியெங்கும்  மனம்  போகுதே 
காதல்  முடிந்த  பிறகும்
இந்த  உலகில்  பயணம்  முடிவதில்லையே 
காற்றில்  பறந்தே  பறவை  வரைந்த  பிறகும் 
இல்லை  தோடங்கும்  நடனம்  முடிவதில்லையே 
இது  எதுவோ  …
தான  தொ  தனன , தான   தொ  தனன
தான  தொ  தனன  தானானே  நன்னா
தான  தொ  தனன , தான  தொ  தனன
தான  தொ  தனன  தானானே  நன்னா 

இது வரை இல்லாத உணர்விது












வரிகள்:- கங்கை அமரன் 
திரை படம் :- 
கோவா 
இசை:- யுவன்  ஷங்கர்  ராஜா
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே....

இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வரவேண்டும்
நீண்ட வழி என் பயணம் ohho

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தான் Ohhh ohh
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

தேகம் இப்போது உணர்ந்தது...
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே....

உன் பேரை சொல்லும் போதே


  
 






வரிகள்:- ந.முத்துக்குமார் 
திரை படம் :- அங்காடி தெரு
 
இசை  :- G. V. பிரகாஷ் 

உன் பேரை சொல்லும் போதே 
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே 
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


நீ பேரழகில் போர்க்களத்தில் 
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே 
பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு 
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் 
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் 
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் 
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து 
வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்.

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...