ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
Sunday, March 7, 2010
Subscribe to:
Posts (Atom)
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
வரிகள் : ந. முத்துக்குமார் இசை : இளையராஜா பாடியவர் : கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...
-
திரை படம் :- மதராசபட்டினம் வரிகள்:- ந.முத்துக்குமார் இசை :- G. V. பிரகாஷ் ஆர...
-
வரிகள்:- வாலி திரை படம் :- நான் கடவுள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தே...
-
வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம்:- தீபாவளி போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் ...